தனிமனித இடைவெளியை கடைபிடித்து - பள்ளிகளை திறக்க வேண்டும் : தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தனிமனித இடைவெளியை கடைபிடித்து பள்ளிகளை திறக்க வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆரோக்கியராசு தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் மருதுபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வெண்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராகீம் மூசா வரவேற்றார்.

கூட்டத்தில், ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள்- மாணவர்கள் விகிதாச்சார எண்ணிக்கையை 1:20 ஆக குறைக்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக நியமனம் செய்யப்பட்டு ஊதியமின்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணியிடங்களை அங்கீகரித்து நியமன காலம் முதல் ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பொது மாறுதலை உடனே நடத்த வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் தொடங்க பள்ளிகளை திறந்து செயல்படுத்த வேண்டும்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

மாவட்ட பொருளாளர் சேவியர் ஸ்டீபன் ஞானம் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்