ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - கனமழையால் பாலாற்றில் வெள்ளம் : அதிகபட்சமாக திருப்பத்தூரில் 65.10 மி.மீ., மழை பதிவு

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வாணி யம்பாடி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் பாலாற்று பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதையொட்டியுள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு வேலூர், சத்துவாச் சாரி, காட்பாடி, கே.வி.குப்பம், பொன்னை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக, காட்பாடி, பொன்னை போன்ற பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மின் தடை ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்த வரை கலவை, சோளிங்கர், அம்மூர், காவேரிப்பாக்கம் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆற்காடு, அரக்கோணம், வாலாஜா பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, கேதாண்டப்பட்டி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

வாணியம்பாடி பகுதியில் பெய்த கனமழையால் பாலாற்று பகுதிகளில் மீண்டும் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. அலசந்தாபுரம் பகுதியில் இருந்து அம்பலூர் பாலாறு வரை தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றுப்பகுதியிலும், வாணி யம்பாடி கீழ் பகுதியில் உள்ள பாலாற்றுப்பகுதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாணி யம்பாடி அடுத்த திரு.வி.க. நகரைச் சேர்ந்த ஷான்பாட்சா (54) என்பவரது வீட்டின் மீது புளியமரம் முறிந்து விழுந்ததால் அவரது வீட்டின் சுவர் சேதமானது. இருணாப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை யினர் அங்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை நேற்று சீர்படுத்தினர்.

திருப்பத்தூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் சிவராஜ் பேட்டை, ஆரீப் நகர், வள்ளுவர் நகர், கலைஞர் நகர், புதுப்பேட்டை சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழைநீரு டன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக் குள் நுழைந்ததால் பெண்களும், குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால், நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ள தாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்:

குடியாத்தம் 2.2 மி.மீ., காட்பாடி 20, மேல் ஆலத்தூர் 4.4, பொன்னை 8.8, வேலூர் 12.4, அரக்கோணம் 8.6, காவேரிப்பாக்கம் 31, சோளிங்கர் 18, வாலாஜா 12, அம்மூர் 65, கலவை 65.2, ஆலங்காயம் 8.2, ஆம்பூர் 22.4, வடபுதுப்பட்டு 7, நாட்றாம்பள்ளி 60, கேத்தாண்டப்பட்டி 25, வாணியம்பாடி 22.4, திருப்பத்தூர் 65.10 மி.மீ., என மழையளவு பதிவாகியிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்