தி.மலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் குப்ப நத்தம் அணைக்கு விநாடிக்கு 172 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தி.மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் நேற்று முன் தினம் முதல் தீவிரமடைந்துள்ளது. கன மழையால், தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களிலும் மழைநீர் தேங்கி உள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நீர்வரத்து கால்வாய்களில், ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகளால், மழைநீர் எளிதாக வழிந்தோட முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக 3.8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக செய்யாறு பகுதியில் 10.3 செ.மீ., மழை பெய்துள் ளது. மேலும், ஆரணி 7.4 செ.மீ., செங்கம் மற்றும் ஜமுனாமரத்தூரில் தலா 1, வந்தவாசி 7.8, போளூர் 5.3, தி.மலை 2.1, தண்டராம்பட்டு 1.6, கலசப்பாக்கம் 4.6, சேத்துப்பட்டு 2, கீழ்பென்னாத்தூர் 1.6, வெம்பாக்கம் பகுதியில் 1.4 செ.மீ., மழை பெய்துள் ளது. அணைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சாத்தனூர் அணை பகுதியில் 3.5 செ.மீ., குப்பநத்தம் அணை பகுதியில் 5.1 செ.மீ., மிருகண்டா நதி அணை பகுதியில் 1.6 செ.மீ.,மழை பெய்துள்ளது. இவற்றில், குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு 172 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago