இலவசமாக தையல் இயந்திரம் பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் :

நாமக்கல் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதனைப் பெற ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். வயது 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்று, வருவாய் சான்று, தையல் பயிற்சி சான்று, வயதுச்சான்று அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று, சாதிச் சான்று இணைக்க வேண்டும்.

மேலும், 2 புகைப்படம், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து இம்மாதம் 31-ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE