குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான மருந்து இறக்குமதி செய்ய கலால் வரி ரூ.6 கோடியை ரத்து செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு கொமதேக நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர்ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல்லைச் சேர்ந்த 2 வயது குழந்தை மித்ரா அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் சூழ்நிலையில் மருந்து இறக்குமதிக்கான கலால் வரி ரூ.6 கோடியை ரத்து செய்ய வேண்டுமென நாமக்கல் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ் கடந்த ஜூன் 21-ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்திருந்தனர். தொடர்ந்து ரூ.6 கோடி கலால் வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. நாமக் கல் மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு வரி விலக்கு அளித்து உதவிய பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்குvtநன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago