கிராமப்புறங்களில் விவசாயிகள், கைவினைஞர்கள், சுய உதவிக் குழுவினர் போன்றோர், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாப்புடன் விற்பனை செய்வதற்காக 2020-21-ம் நிதி ஆண்டில் தலா ரூ.41 லட்சம் மதிப்பில் 100 சந்தைகளை கட்டுவதற்கு அதிமுக அரசு ரூ.41 கோடி ஒதுக்கியது.
அதன்படி, இந்தத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரின் மேற்பார்வையில் வாரச்சந்தை கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது.
இது குறித்து முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறியது: இங்கு 36 கடைகள், கழிப்பறைகளுடன் கூடிய சந்தை கட்டப்பட்டுள்ளது. ஒரே நிதி ஆண்டில் 100 சந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முதலில் ஏம்பலில் தான் பணி முடிக்கப்பட்டுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago