வெங்கடேஸ்வரா பாலி டெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 41 பேர் தேர்வாகினர்.
வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தியா-ஜப்பான் லைட்டிங் பிரைவேட் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரியின் துணைத் தலைவர் என்.ஜனார்தனன் தலைமையில் நடை பெற்ற முகாமை கல்லூரி தலைவர் என்.ரமேஷ் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஞானசேகரன் வரவேற்றுப் பேசினார். முகாமில், இந்தியா-ஜப்பான் லைட்டிங் நிறுவன துணை மேலாளர் ஜாபர், மனிதவள அதிகாரி சாண்டி ஆகியோர் தேர்வு நடத்தினர்.
முகாமில், 52 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில் தகுதியின் அடிப்படையில் 41 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளமும் உணவு, மருத்துவ காப்பீடு வசதிகள் கிடைக்கும். முகாமின் நிறைவாக, வேலைவாய்ப்பு அலுவலர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago