தேனியில் மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைவர் ஆர்.சங்கரநாராயணன் தலைமை வகித்து காமராஜர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநிலச் செயலாளர் மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் சுப்புராமன், மெல்வின், ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தேனியில் மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகித்து, காமராஜர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தேனி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில்நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் அய்யப்பன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி, தேனி பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சிநாள் விழாவுக்கு தலைமை ஆசிரியர் ரா.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago