ஆரணி நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை :

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் சுமார் 80 பேர் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர் களுக்கு கடந்த 2 மாதங்களாக கூலி வழங்கவில்லை என கூறப் படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறை யிட்டும் பலனில்லை.

இதனால் வேதனை அடைந்த தூய்மைப் பணியாளர்கள், ஆரணி நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “பல்வேறு இன்னல்களுக்கு இடையே, நகராட்சி பகுதிகளை தூய்மைப் படுத்தி வருகிறோம். கடந்த 2 மாதங்களாக கூலி வழங்கவில்லை. இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு உடனடியாக கூலித் தொகையை வழங்க வேண்டும்” என்றனர்.

பின்னர், நகராட்சி ஆணை யாளர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கூலித் தொகையை வழங்கும் வரை, வெளியே செல்லமாட்டோம் என தெரிவித்து முழக்கமிட்டனர்.

அப்போது, வரி பாக்கி அதிகள வில் உள்ளதால் நகராட்சி நிர்வாகத்தை வழி நடத்த நிதி ஆதாரம் இல்லை என்றும், அதனால், கூலித் தொகையை வழங்க முடியவில்லை என்றும் நகராட்சி ஆணையாளர் ராஜ விஜய காமராஜ் தெரிவித்தார்.

இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களது உழைப்புக்கான கூலியை கொடுத்திருந்தால், நாங்கள் ஏன்? போராட போகி றோம் என தொழிலாளர்கள் பதிலளித்தனர். பின்னர், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, கூலித் தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார்.

இதனையேற்று, போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்