அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளில் மனநல சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் விநி யோகம் இல்லை என புகார் எழுந் துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மன நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மனநலத் துறை உள்ளது.
தினமும் ஒவ்வொரு அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனை களிலும் 50 பேர் முதல் 100 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.
தொடர்ச்சியான ஆலோசனை, சிகிச்சை அளித்தால் மட்டுமே மனநலம் பாதித்தோரைக் கட்டுப் படுத்தவும், படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் முடி யும். ஆனால் தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகளை உட்கொள் ளாவிட்டால். அவர்கள் இயல்பு நிலைக்கு மீட்க முடியாமல் அவர் களை பராமரிப்பதும் சிரமமாகி உறவி னர்களே கைவிடும் பரிதாபமும் ஏற் படலாம்.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஒரு ஆண்டாகவே மனநல சிகிச்சைக்கான மருந்து, மாத் திரைகளுக்கு பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது.
குறிப்பாக மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள் ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதீத பாதிப்பு ள்ள மனநோயாளிகளை கட்டுப் படுத்தும் அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளுக்கு பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மனநலத் துறை மருத்துவர்கள் கூறியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனா தொற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பெரும்பாலான நிதியும், அதற்கான சிகிச்சைக்கும், மருந்து கொள்மு தலுக்கும் நிதி திருப்பி விடப்பட்டது.
ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநலத் துறை புறக்கணிப்பட்ட துறையாக உள்ளது. தற்போது நிதியும் சரிவர ஒதுக்கீடு இன்றி மனநல சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகளை 6 மாதமாக தமிழ்நாடு மருத்துவக் கழகம் முறை யாக விநியோகம் செய்ய வில்லை.
கடந்த சில மாதமாக இருப்பில் உள்ள மருந்து, மாத்திரைகள் மற்றும் மாற்று மாத்திரைகளை வைத்தும் சிகிச்சை அளித்தோம்.
சாதாரண பதற்றம், தூக்கமின்மை, மன அழுத்தத்துக்கு மருந்து, மாத்தி ரைகள் மட்டுமே உள்ளன. வலிப்பு நோய்க்கு மருந்து, மாத்திரை இல் லை.
தீவிரமான மன நோய்க்கு அளிக்கப்படும் ரிஸ்பெரிடோன், ஒலான்சிபைன், ஹாலோ பெரிடால், சோடியம் வால்புரோயேட், கார் பமசிபைன் உள்ளிட்ட முக் கிய மருந்துகளுக்கு மதுரை, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, தூத் துக்குடி மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளில் பற்றாக்குறை உள் ளது. தற்போது இதற்கான மாற்று மருந்துகளும் இல்லை.
பொதுவாகவே மனநலம் பாதிப் புக்கான மருந்துகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைப்பது இல்லை. அதனால், நோயாளி களுடன் உறவினர்கள் 50 கி.மீ. முதல் 100 கிமீ. பயணம் செய்து அழைத்து வருகின்றனர்.
நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குக்கூட மருத் துவர்கள் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து வெளியே மருந்து, மாத்தி ரைகளை வாங்கிக் கொள்ளச் சொல் லலாம்.
ஆனால், மன நலம் பாதிப்பு களுக்கான மருந்துகளை மருத்துவர் களின் பரிந்துரைச் சீட்டு இன்றி வெளியில் உள்ள மருந்தகங்களில் வழங்க மாட்டார்கள். இதனால் உறவினர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுவே மற்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரை பற்றாக்குறை என்றால் அத்தகவல் உடனே வெளி ச்சத்துக்கு வந்திருக்கும். ஆனால், மனநோயாளிகள் என்பதால் இந்த பிரச்சினை குறித்த தகவல் வெளியே வருவதில்லை.
மனநலத் துறை மருத்துவர்கள் 5 வகை மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்தால், அதில் அதி கபட்சம் 2 அல்லது 3 மாத்தி ரைகள் மட்டுமே மாவட்ட அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கிடைக்கிறது.
அதனால், மனநோயாளிகள், அவர் களின் உறவினர்கள் அலைவதைத் தடுக்க மாவட்ட மனநலத் திட்டத்தில் மருந்து, மாத்திரைகள் மட்டுமாவது அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்து வமனை டீன் ரத்தின வேலுவிடம் கேட்டபோது, மருந்து, மாத்திரகைள் பற்றாக்குறை ஏற்பட்டால் நாங்களே கொள்முதல் செய்வதற்கு அதிகாரம் உள்ளது. அதனால், மன நல சிகிச்சையில் பாதிப்பு இல்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago