காணாமல்போன பாசக்கார நாய்க்காக - ரூ.5 ஆயிரம் சன்மானம் அறிவித்த மதகுபட்டி விவசாயி :

By இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே மதகுபட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், காணாமல் போன தனது பாசக்கார நாய்க்காக ரூ.5 ஆயிரம் சன்மானம் அறிவித்து பல கிராமங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

மதகுபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த விவசாயி வைரவன் (52). ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கிறார். அவற்றின் பாதுகாப்புக்காக நாய்களை வளர்ப்பது வழக்கம்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு கமுதியில் இருந்து நாய் ஒன்றை வாங்கி வந்தனர். அந்த நாயை அவரும், அவரது குடும்பத்தினரும் ‘ஜீ’ எனப் பெயரிட்டு பாசமாக வளர்த்தனர்.

அவர்களையே சுற்றிச் சுற்றி வந்த நாய், சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனது நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சன்மானம் தரப்படும் என சுவரொட்டி அச்சடித்து மதகுபட்டி, பாகனேரி, காடனேரி, சொக்கநாதபுரம், ஒக்கூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒட்டியுள்ளார்.

பாசாக்கார நாய்க்காக ரூ.5 ஆயிரம் சன்மானத்துடன் சுவரொட்டி ஒட்டியிருப்பது அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வைரவன் கூறியதாவது: நாய் காணாமல் போனதில் இருந்தே எங்களால் நிம்மதியாக சாப்பிட, தூங்க முடியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நாயை கண்டுபிடித்து கொடுக்க சன்மானம் அறிவித்தோம். எங்கள் பகுதி இளைஞர்கள் சிலரும் நாயை கிராமங்களில் தேடி வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்