கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிவித்தால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாநரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கருவுற்ற தாய்மார்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வதும் அல்லது மருத்துவரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
எந்தவொரு மருத்துவமனையிலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலமாகவோ அல்லது வேறு பரிசோதனை மூலமாகவோ கருவில் இருக்கும் குழந்தை ஆண் அல்லது பெண் என்று தெரிவிக்கப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மருத்துவருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை- குண்டர் சட்டம் விதிக்கப்படும்.
இக்குற்றச் செயலில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். மேலும், இது தொடர்பான புகார்களை 9444982690 என்ற அலைபேசி எண்ணையோ அல்லது இலவச தொலைபேசி எண்1077-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago