போலி முகநூல் கணக்கை தொடங்கி பணம் பறிக்க முயற்சி :

By செய்திப்பிரிவு

சிவகங்கை எஸ்பி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

முகநூல் (பேஸ்புக்) கணக்கில் உள்ள ஒருவரது புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பயன்படுத்தி, அவரது பெயரிலேயே போலியாக முகநூல் கணக்கைத் தொடங்கி அவரது நண்பர்களிடம் பணம் பறிக்கும் முறைகேடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை எஸ்பி டி.செந்தில்குமார் பெயரில் மர்ம நபர் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி, அதில் அவரது புகைப்படத்தையும் பதி வேற்றம் செய்திருந்தார்.

பின்னர் சிவகங்கை கோக லேகால் தெருவைச் சேர்ந்த விஜ யகுமார் என்பவருக்கு நண்பராக வேண்டுகோள் (பிரண்ட் ரெக் வஸ்ட்) விடுத்தார். அவர் எஸ்பி புகைப்படத்தைப் பார்த்ததும் அனுமதி கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் சாட்டிங் மூலம் அவசரமாக ரூ.10 ஆயிரம் தருமாறும், உங்களுக்கு கூகுள் பே அல்லது போன் பே கணக்கு இருக்கிறதா எனக் கேட்டுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த விஜயகுமார் போலீஸில் புகார் தெரிவிக்கப் போவதாக கூறியவுடன், அந்நபர் உடனே எஸ்பி டி.செந்தில்குமார் பெயரில் இருந்த போலி முகநூல் கணக்கை அழித்துள்ளார். இதேபோல், மேலும் சிலரிடமும் எஸ்பி பெயரில் போலி முகநூல் மூலம் பணம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்பி டி.செந்தில்குமார் கூறுகையில், ‘எனது பெயரில் முகநூல் மூலம் பணம் கேட்டால், அதனை பிளாக் (தடை) செய்து விடுங்கள். அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்,’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்