இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றிதின சுடருக்கு - பருந்து கடற்படை விமானதள வீரர்கள் மரியாதை :

இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினச் சுடருக்கு மாவட்ட ஆட்சியர், ராணுவ அதிகாரிகள், போரில் பங்கேற்ற வீரர்கள் அஞ் சலி செலுத்தினர்.

1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றது இதன் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் செல்லும் வெற்றிச் சுடரை கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த வெற்றிச்சுடர் பல மாநி லங்கள் வழியாக நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தளத்தை வந் தடைந்தது.

ராணுவ அதிகாரி கரம்வீர், மஞ்சித்சிங் ஆகியோர் தலை மையில் வந்த வெற்றிச்சுடரை பருந்து விமானத்தள கமாண்டர் கேப்டன் வெங்கடேச அய்யர் பெற்றுக்கொண்டார்.

அங்கு வெற்றிசுடருக்கு கேப்டன் வெங்கடேச அய்யர் தலைமையில் வீரர்கள் அணிவகுப்பு மற்றும் மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ ஹவில்தார்கள் எம்.முருகானந்தம், என்.சாத்தையா மற்றும் எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றிச் சுடருக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு பிற் பகலில் கொண்டு வரப்பட்ட வெற்றிச் சுடருக்கு ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து 1971-ல் போரில் ஈடுபட்ட ராமநாதபுரம் மகர்நோன்பு பொட்டல் பகுதி யைச் சேர்ந்த முன்னாள் ராணுவ சுபேதார் எஸ்.ராமையா மற்றும் பட்டணம்காத்தான் கிருஷ் ணாநகரைச் சேர்ந்த ராணுவ வீரர் கே.ராமசாமியின் வீடுகளுக்கும் சுடர் எடுத்துச்செல்லப்பட்டு அவர் கள் மரியாதை செலுத்தினர்.

இன்று மண்டபம் இந்திய கடலோரக் காவல்படை முகாம், தனுஷ்கோடி, அப்துல் கலாம் நினைவு மண்டபம் ஆகிய இடங்களுக்கும் கொண்டு செல் லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE