ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் கண்மாய்க்குரிய நிலத் தை தனியார் ஆக்கிரமிப்பு செய் ததைக் கண்டித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது பாரனூர் கிராமம். இங்குள்ள கண்மாய் மூலம் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கண்மாய்க்குரிய 100 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நேற்று திரண்டு வந்தனர். ஆக் கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப் படும் நிலத்தில் ஜேசிபி மூலம் நடந்த சுத்தப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர். பின்னர், கண்மாய் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் கூறியதாவது: பாரனூர் கண்மாய் பகுதி அருகே போலி ஆவணங்கள் மூலம் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனி நபர்கள் 255 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். அவர்கள் கண் மாய் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் எதிர்காலத்தில் கண்மாயில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறையினர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். போலியான ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ள நிலத்தை மீட்க வேண்டும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago