ரங்கம் கோயிலிலிருந்து திருமலைக்கு வஸ்திர மரியாதை :

By செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து திருமலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வஸ்திர மரியாதை நேற்று எடுத்து செல்லப்பட்டது.

மொகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ரங்கம் கோயில் உற்சவரான நம்பெருமாள் விக்ரகத்தை பாதுகாக்கும் வகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் திருப்பதியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ஆடி மாதம் 1-ம் தேதி வஸ்திர மரியாதை அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, ரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்திலிருந்து யானை ஆண்டாள் முன் செல்ல மங்கள வாத்தியங்கள் முழங்க வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை அதிகாரிகள், கோயில் ஊழியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர், வஸ்திர மரியாதைகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.

ஆடி மாதம் முதல் நாளன்று (ஜூலை 17) திருப்பதி ஏழுமலை யானுக்கு வஸ்திர மரியாதை அளிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்