ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு - 15 ஆயிரம் கோவிஷீல்டு, கோவாக்சின் : தடுப்பூசிகள் வந்தடைந்தன :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்துக்கு 15 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்தடைந்தன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த11-ம் தேதி 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்டத்துக்கு வந்தன.

இந்நிலையில் 5,000 கோவி ஷீல்டு தடுப்பூசிகளும், 4,000 கோவேக்சின் தடுப்பூசிகளும் வேலூர் மாவட்டத்துக்கு நேற்று வந்துள்ளன. அதேபோல, ராணிப் பேட்டை மாவட்டத்துக்கு 2 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,120 கோவாக்சின் தடுப்பூசிகளும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 2 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி களும், 800 கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்தடைந்தன. இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம் நேற்று தொடங் கப்பட்டன.

கரோனா தடுப்பூசி போடு வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்