போலி மருத்துவர்கள் தொடர்பாக 104 என்ற கட்டணமில்லாத போன் எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் செய்யலாம், என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் போலி மருத்துவர் மோகன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஆய்வக உதவியாளர் கல்வி மட்டுமே பயின்று மருத்துவராக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர் நடத்தி வந்த மருந்தகத்தில் பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் தவிர மருந்து விற்பனைகடை வைத்திருப்பவர்கள், மருத்துவம் பயிலாதவர்கள் உள்ளிட்டோரிடம் மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை விபரீதங்கள் நிகழ்வதற்கு காரணமாக அமையக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்ற தவறான நபர்கள் சிகிச்சை அளிப்பது தெரியவந்தால் உடனடியாக 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago