திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிர மிப்புகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், திருப்பத்தூர் -கிருஷ்ணகிரி சாலை, திருப்பத்தூர்-வாணியம்பாடி பிரதான சாலையோரங்கள் ஆக்கிரமிக்கிப் பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நகரில் போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கடந்த சில நாட்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரி களை அழைத்து கடந்த 6-ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை தவிர இதர வாகனங்கள் செல்லக்கூடாது, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களது வாகனங்களை பேருந்து நிலையத்தின் கிழக்கு புறமாக உள்ள பார்க்கிங்கில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கு மாதாந்திர டோக்கன் வழங்கப்படும். அந்த இடத்தில் மட்டுமே வியாபாரிகள் வாகனங்களை நிறுத்த வேண்டும். பிற இடங்களில் நிறுத்தக் கூடாது.

தரைக்கடைகள் போடுவதற்கு இடம் குறியீடு செய்து தரப்படும். அங்கு மட்டுமே கடைகளை அமைத்து வியாபாரம் செய்யலாம். நகராட்சி கடைகள் உள்ள இடத்தில் மட்டுமே வியாபாரப்பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும். நடை பாதைகள், பயணிகள் வந்து செல்லும் பகுதி களில் ஆக்கிரமித்து கடைகளை அமைக்கக்கூடாது.

அதேபோல, பேருந்து நிலை யத்தில் கடைகளை நடத்தி வருவோர், கடைக்கு வெளியே 3 அடி தொலைவில் இடத்தை ஆக்கிரமித்து கடையை விரிவுப் படுத்தக்கூடாது. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், பொது இடங்கள், சாலையோரங்களில் இடங்களை ஆக்கிரமித்து கடைகளை அமைக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நகராட்சி உத்தரவை மீறி பேருந்து நிலை யத்தில் ஏராளமான வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருவதாக ஆணையாளர் சத்தியநாதனுக்கு தகவல் கிடைத் தது.

அவரது உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் நிர்மலா தேவி, நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.

குறியீடு செய்யப்பட்ட இடத்துக்கு வெளியே அமைக்கப் பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்