காட்பாடி ரயில்வே பாதுகாப் புப் படை ஆய்வாளர் தேப்ராத் சத்பதி தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலர்கள் கடந்த 11-ம் தேதி 1-வது நடைமேடையில் ரோந்து சென்றனர்.
அங்கு நீண்ட நேரமாக அமர்ந் திருந்த 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில், மகாராஷ் டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் என்றும் ரயிலில் வழிதவறி காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்ததாக தெரிவித்தார். இதை யடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் சிறுவனை மீட்டு காட்பாடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், நாக்பூரில் உள்ள பெற்றோருக் கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி, காட்பாடிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த பெற்றோர் வசம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago