கரோனா ஊரடங்கு தளர்வால் மூன்றரை மாதங்களுக்குப் பின் புதுச்சேரியில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. வெளியூர் செல்ல முன்பதிவும் தொடங்கியது.
கரோனா 2வது அலை பரவல்காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் தமிழகம், புதுவையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நோய் தொற்று குறையத் தொடங் கியதால் இரு மாநிலங்களிலும் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதமே புதுவையில் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும், புதுவை தனி மாநிலம் என்பதால் தமிழக அரசு பேருந்துகள் புதுவைக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. மாநில எல்லை வரை பேருந்துகள் வந்து சென்றன. அங்கு பயணிகளை இறக்கியும், அங்கிருந்து பயணி களை ஏற்றியும் சென்றது. மாநில எல்லையில் இருந்து ஆட்டோ பிடித்தும், சொந்த வாகனங்களிலும் புதுச்சேரிக்குள் வந்து செல்லும் நிலைமை நீடித்தது. இதனால் தேவையற்ற அலைச்சல் மற்றும் பணவிரயத்தை பயணிகள் எதிர் கொண்டனர். இதைத் தொடர்ந்து, ‘தமிழகப் பேருந்துகளை புதுவைக்கு இயக்க அனுமதிக்க வேண்டும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வின்படி, மூன்றரை மாதங்களுக்குப் பின் நேற்று முதல் தமிழக பேருந்துகள் புதுவைக்கு வரத் தொடங்கியது. புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகளும் இயங்கின.
சென்னை, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை, செஞ்சி, நாகப்பட்டினம், காரைக் கால், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ கப் பகுதிகளுக்கு புதுவையில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் வரத் தொடங்கின.
அதேபோல புதுவையில் இருந்து நாகர்கோவில், திருநெல் வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் தமிழக அரசின் விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவும் தொடங்கியது.
இதுதொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் 180 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம்’’ என்றனர்.
அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் - புதுச் சேரி இடையே அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் பேருந்து போக்குவரத்து நள்ளிரவு வரைநீடிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago