சிவகங்கை மாவட்டத்தில் சிற்றாறு, கண்மாய், குளங்களை தூர்வாரியதால் நிலத்தடி நீர்மட்டம் கடந்த சில ஆண்டு களாக அதிகரித்து வருகிறது.
பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் ஆதார விவரக் குறிப்பு மையம் மாதம்தோறும் நிலத்தடி நீர்மட்டத்தை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுகள் மாநிலம் முழுவதும் அம்மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 3,238 திறந்தவெளி கிணறுகள், 1,480 ஆழ்துளைக் கிண றுகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு வரை சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி, சிற்றாறு, கண்மாய், ஓடைகளில் மணல் கொள்ளை, கானல் நீரான மழைநீர் சேகரிப்பு போன்றவற்றால் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இருந்தது. மேலும் அவ்வப்போது மழை பெய் தாலும் சிற்றாறுகள், கண்மாய், குளங் கள் தூர்வாராததால் தண்ணீர் தேங் குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சிற்றாறுகள், கண் மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை மாவட்ட நிர்வாகம் தூர்வாரி வருகிறது. இதனால் சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தரைமட்டத்தில் இருந்து கிணறுகளின் நீர்மட்டம் 2021 ஜனவரியில் 3.96 மீ., பிப்ரவரியில் 3.37மீ.,மார்ச் 3.20 மீ., ஏப். 3.49 மீ., மே 3.68 மீ., ஜூன் 3.93 மீ. ஆக உள்ளன.
மேலும் கோடை காலத்திலும் நிலத்தடி நீர்மட்டம் பெரிதாகக் குறையவில்லை. தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago