திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள நடுமண்டலம் கிராமம் தேவர் நகர் பகுதியில் சில ஆண்டுகளாக குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல் குவாரியால் அப்பகுதி விவசாய நிலங்கள், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குவாரியை மூடினால்தான் இப்பகுதி வாழத் தகுதியான பகுதியாக இருக்கும், இல்லாவிட்டால் கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று நத்தம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குவாரியை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதையடுத்து நேற்று கிராம மக்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநகர் டி.எஸ்.பி. சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் பேச கிராம மக்களின் பிரதிநிதிகளை போலீஸார் அழைத்துச் சென்றனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இம்முறை உறுதியாகக் குவாரியை மூட வேண்டும், இல்லாவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும், எனக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago