அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் தங்க பத்திர திட்ட முகாம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இன்று (ஜூலை12) முதல் தங்க பத்திர திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப் பாளர் ஜோசப் ராஜ் தெரிவித் துள்ளதாவது:

இந்திய அஞ்சல் துறை சார்பில், இந்திய ரிசர்வ் வங்கி யால் தங்கத்தை பத்திர வடிவில் விற்கக்கூடிய தங்க பத்திர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இன்று(ஜூலை 12) முதல் வரும் 16-ம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. ஒரு கிராம் ரூ.4,807 என்ற விலையில் தங்க பத்திர திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அன்றைய தினம் தங்கத்துக்கான விலையை ரொக்கமாக பெற் றுக்கொள்ளலாம் என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்