புதுக்கோட்டை மாவட்டத்தில் - விரைவில் ‘பசுமைக் குழு’ ஆய்வு : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

சுற்றுச் சூழலை ஆய்வு செய்வதற் காக மாநில அளவில் அமைக்கப் பட்ட பசுமைக் குழுவானது முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே திருக் கட்டளையில் சலவைத் தொழி லாளர்களுக்கு நேற்று இலவச சலவைப் பெட்டிகளை வழங்கி அவர் பேசியது:

மாநில அளவில் அரசின் முதன்மைச் செயலாளர் தலை மையில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக் குழுவை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் தொழில் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தோர் உறுப்பி னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, அந்தந்த மாவட் டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 உறுப்பினர் களைக் கொண்டு மாவட்ட அளவிலான பசுமைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பசுமைக் குழுவானது மரங்களைப் பாதுகாக்கவும், இக்கட்டான நேரத்தில் மரங் களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளுடன் உரிய ஆலோச னைகளை வழங்கும்.

மேலும், வனப்பகுதியில் அதிக அளவில் மரங்களை வளர்க்க இந்த பசுமைக் குழு திட்டங்களை வகுக்கும். அதன்படி, மாநில அளவில் அமைக்கப்பட்ட பசுமைக் குழுவானது, முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்து 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள யூக்கலிப்டஸ் மரங் கள், சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு பிற மரக்கன்றுகளை நட்டு, அடர்வனம் நிறைந்த பகுதி யாக மாற்ற நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று, மாநிலம் முழுவதும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தமிழ்செல்வன், திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்