முதல்கட்ட முகாமில் 2,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு - இளையோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க ‘திசைகாட்டும் திருச்சி’ : அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு

By செய்திப்பிரிவு

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரோனா தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவு றுத்தியுள்ளார். அதன்படி, திருச்சியில் இணையவழி வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

கரோனா காலத்தில் நேரடி வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது கடினம் என்பதால், இணைய வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற் கும் இந்த முகாம் ஜூலை 15 முதல் ஆக.14 வரை நடைபெறும்.

முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமில் சுமார் 2,000 பேருக்கு வேலை கிடைக்கும். இதில் பங் கேற்க விருப்பமுள்ள இளை யோர் www.aramhr.com என்ற இணைய தளம் மூலமாகவோ, 8566992244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ விண்ணப் பிக்கலாம். 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டு முழுவதும் இந்த ‘திசை காட்டும் திருச்சி' வேலைவாய்ப்பு முகாம் நடத் தப்படும். எனவே திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள தொழில், வணிக நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வலுசேர்க்க வேண்டும்.

இதேபோல, அடுத்தகட்டமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுப் பணி தேர்வுகளுக்கான பயிற்சியும் விரைவில் தொடங் கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்