தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் (நேற்று முன்தினம், நேற்று) நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு அமைப் பின் தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியது:
மேகேதாட்டு அணை கட்டப் படும் என அறிவித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஜூலை 13-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தப்படும் போராட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கம் பங்கேற்கும்.
தமிழ்நாட்டை பல்வேறு மண்ட லங்களாக பிரித்து சின்னாபின் னமாக்கி சிதைக்கும் சூழ்ச்சித் திட்டத்தில் பாஜக இறங்கியுள்ளது. எனவேதான், கொங்குநாடு என்று குறிப்பிட்டு வருகின்றனர். பாஜகவின் இந்த சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றி ணைந்து முறியடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தொழில், வணிகம் ஆகியவற்றில் வட நாட்டவர் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். அதேபோல, வெளி மாநிலத்தவருக்கு எதிராக தமிழர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும். இதன் முதல் கட்டமாக திருச்சி பொன்மலை, பெல், சென்னை ஆவடி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யப்படும்.
அனைத்து கோயில்களிலும் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். விரும்பிக் கேட்போருக்கு மட்டும் சம்ஸ்கிரு தத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேளுங்கள் என்று வீடுதோறும் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளோம் என் றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago