வடலூர் சத்திய ஞானசபையில் இன்று நடைபெறும் - மாத பூச ஜோதி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை :

வடலூர் சத்திய ஞானசபையில் இன்று (ஜூலை11) நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று செயல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் மாத பூச ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிவுரையின் பேரில் இன்று (ஜூலை 11) இரவு நடைபெறும் மாத பூச ஜோதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் சத்திய ஞானசபையில் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். சத்திய தருமசாலை பழக்க வழக்க படியான வழிபாடுகள் அனைத்தும் நடைபெறும்.சத்தியஞான சபை மற்றும் சத்திய தருமசாலைக்கு பக்தர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ஜோதி தரிசனத்தை இரவு 7. 45 மணி முதல் 8.45 மணி வரை வள்ளலார் தெய்வ நிலைய இணைய தளத்தில் நேரலையாக காணலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்