ஹோட்டல், பேக்கரி ஊழியர்களுக்கு - உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி :

By செய்திப்பிரிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட் டங்களில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களுக்கு இந்தியஅரசின் உணவு பாதுகாப்புஆணையரகம் பரிந்துரைத்துள்ள பரிக்‌ஷன் (Parikshan) அமைப்பு மற்றும் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை இணைந்து உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி விழுப்புரத்தில் நேற்று நடத்தப்பட்டது.

இப்பயிற்சிக்கு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமை தாங்கினார். கலப்படங்களை எளிய முறையில் கண்டறிதல், உணவு பாதுகாப்பு குறித்த மேற்பார்வையாளர்களின் பணிகள், தரமான உணவுப் பொருட்களை வாங் குதல் முதல் அதை பாதுகாப்பாக தயாரித்து நுகர்வோருக்கு கொண்டு சேர்ப் பதற்கு அவர்களின் பொறுப்பு குறித்து பயிற்சி அளித்தார்.

சான்றிதழ் வழங்கல்

அதன் பின்னர் அவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது.

இந்த சான்றிதழ் 2 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும்.

இம்முகாமில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டா லின்ராஜரத்தினம், அன்புபழனி, பிரசாத், இளங்கோவன், பத்மநாபன், அருண்மொழி, மோகன், கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்