திண்டுக்கல்லில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனச் சேவையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகளை தீவிரப் படுத்தி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், மாவட்டத்தில் முதன்முறையாக கரோனா தடுப்பூசி செலுத்து வதற்கான நடமாடும் வாகன சேவை நேற்று தொடங்கப்பட்டது.
திண்டுக்கல்லுக்கு நேற்று வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனச் சேவையைத் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சி யில் அமைச்சர்கள் ஐ.பெரிய சாமி, மா.சுப்பிரமணியன் ஆகி யோர் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனச் சேவையைக் கொடியசைத்து தொடங்கி வைத் தனர்.
இந்த வாகனம் கிராம மக் கள், பொது இடங்களில் பணி புரிபவர்களுக்கு அவர்களின் இடத்துக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்த பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி வாகனம் மூலம் தினமும் 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
நல்லமணி டிரான்ஸ்போர்ட்டின் என்.என்.என்.ஆர்.நல்லமணி, தடுப்பூசி சேவைக்கான மினி பேருந்தை வழங்கியுள்ளார். 2 நடமாடும் வாகனங்கள் திண்டுக் கல் மாவட்டத்தில் இன்று முதல் வலம்வர உள்ளன.
இதன் மூலம் கரோனா தடுப்பூசி மக்களை எளிதில் சென்றடையும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago