விருதுநகர் மணி நகரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (66). தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், விருதுநகர் எஸ்.பி மனோகரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 8-ம் தேதி மாலை எனது மொபைல் போனுக்கு எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதை மீண்டும் செயல்படுத்த கூடுதல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி குறுஞ்செய்தி மூலம் லிங்க் வந்தது. அதில் எனது பெயர், வங்கி டெபிட் கார்டின் எண், ரகசிய குறியீட்டு எண் மற்றும் ஓடிபி எண் ஆகியவற்றை பதிவு செய்தேன். சற்று நேரத்தில் எனது வங்கிக் கணக்கில் இருந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் மூன்று தவணைகளில் ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. உடனடியாக ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றினேன்.
இந்நிலையில், அதே வங்கியில் உள்ள எனது மற்றொரு கணக்கில் இருந்து ரூ.10,000 எடுக்கப்பட்டது.
எனது வங்கிக் கணக்குகளில் இருந்து திருடப்பட்ட ரூ.60 ஆயிரத்தை மீட்டுத் தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago