பெட்ரோல், டீசல், காஸ் சிலிண் டர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் சாம்சன், மாநில ஊடக பிரிவு துணைச் செயலாளர் ஜீவா, நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
நாகை அவுரித்திடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் செய்யது அனஸ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். மகளிர் அணிச் செயலாளர் அனுராதா, ஒன்றியச் செயலாளர் பிரான்சிஸ், இளைஞரணிச் செயலாளர் ராம் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் ரயிலடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட் டச் செயலாளர் எம்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சிவ.இளங்கோ, நற் பணி மன்ற மாவட்டச் செய லாளர் தரும.சரவணன் ஆகியோர் பேசி னர்.
இதில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், பெரம்பலூர் பாலக் கரையில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் தலைமையில், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் முகமது உசேன், இளைஞரணி மாவட்டச் செயலா ளர் கார்த்தி உள்ளிட்டோர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago