இதையடுத்து, பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து விரிவுப்படுத்தப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். அதன்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், பயணிகள் பயன்படுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இரு சக்கர வாகனம் மற்றும் இதர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago