நாமக்கல் மாவட்டத்தில் 371 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி : மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 371 கர்ப்பிணிகள் மற்றும் 234 பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

தேசிய சுகாதார இயக்ககம் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் பரிந்துரையின்படி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 27 இடங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 371 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 234 பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 3.32 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 70 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டுள்ள தடுப்பூசிகளையும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 6137 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE