கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவாங் கூரில் பொதுப்பணித்துறை (மருத்துவ பணிகள்) சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூரில் ரூ.381 கோடி மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2020 ஆகஸ்டு மாதம் தொடங்கி 2022 பிப்ரவரியில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால், கட்டுமானப் பணி நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குச் சென்று ஆட்சியர் தர் நேற்று பார்வையிட்டார்.
இந்தப் புதிய கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், 700 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்டிடம், மாணவ மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடம், கல்லூரி முதல்வர் குடியிருப்பு, செவிலியர் விடுதிக் கட்டிடம், மருத்துவ பேராசிரியர் குடியிருப்பு, குடிமையியல் மருத்துவர் குடியிருப்பு, இறுதி ஆண்டு பயிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிக் கட்டிடம், நவீன சமையலறை கட்டிடம், பிணவறை கட்டிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளின் தரத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர் அரசு மருத்துவக் கல்லூரியின் பிரதான கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறை,ஆய்வுக் கூடம், உடற் கூறியல் அருங்காட்சியகம் மற்றும் உடற் கூறியல் ஆய்வறை முதலியவற்றையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ரா.மணிவண்ணன், மருத்துவக் கல்லூரி குடிமையியல் மருத்துவர்கள் பழமலை, நேரு, உதவிச் செயற்பொறியாளர் சுப்பையா, உதவிப் பொறியா ளர்கள் மற்றும் மற்றும் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago