திருச்சி மாவட்டத்தில் - 65 கொள்முதல் நிலையங்களில் 66,452 டன் நெல் கொள்முதல் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 66,452 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள் ளது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட் டத்தில் நிகழாண்டில் 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 66,452 டன் நெல் கொள்முதல் செய் யப்பட்டு,13,970 விவசாயிகளுக்கு ரூ.120 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

துறையூர் வட்டம் உப்பிலிய புரம் பகுதியில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நெல் வரத்து அதிகமாக இருப்பதால், ஜூலை 2-ம் தேதி முதல் வைரிசெட்டிப்பாளையம், பி.மேட்டூர், எரக்குடி ஆகிய இடங் களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் இதுவரை 6,332 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் ஆய்வு

பி.மேட்டூர், வைரி செட்டிப் பாளையம், புளியஞ் சோலை, ஆலத்துடையான்பட்டி, எரக்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள் முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் க.சிற்றரசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, வட்டாட்சியர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்