கால்நடைகளுக்கான காப்பீடு திட்டம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாவட் டத்தில் 4,800 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35,000 வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி யினருக்கு 70 சதவீத மானியத்தி லும் காப்பீடு செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் இரண்டரை முதல் 8 வயது வரையிலான பசு, எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கால்நடையை காப்பீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்