கடுமையான போட்டிக்கு இடையே இந்திய அணுமின் கழகத்திடமிருந்து 12 நீராவி உற்பத்திக் கலன்களை தயாரித்து வழங்குவதற்கான ஆணையை பெல் நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து பெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரூ.1,405 கோடி மதிப்புள்ள இந்த ஆணையை இந்திய அணுமின் கழகத்தின் தொகுப்பு பயன்முறை கொள்முதல் திட்டத்தின் கீழ் பெல் நிறுவனம் பெற்றுள்ளது.
நாட்டின் 4 இடங்களில் அமைக் கப்படவுள்ள இந்தியாவின் மிக உயர்ந்த திறன் கொண்ட உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்ட 700 மெகா வாட் நிகர் உயர ழுத்த கனநீர் உலைகளுக்கு 12 நீராவி உற்பத்திக் கலன்கள் திருச்சி பெல் தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், இது இந்திய அணுமின் கழகத்தின் 10 X 700 மெகா வாட் அணுமின் திட்டங்களின் தொகுப்பு பயன்முறை செயல்படுத்தல் திட்டத்துக்காக போட்டி ஏலத்தின் மூலம் பெல் நிறுவனம் பெற்ற 2-வது பெரிய ஆணையாகும். இத்திட்டத்தின் கீழ் 32 அலை உலை தலைப்பி தொகுப்புகளை வழங்குவதற்காக பெல் நிறுவனம் பெற்ற முதல் ஆணை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் சுயசார்பு அணுமின் திட்டத்தின் 3 நிலைகளுடனும் இணைந்த ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் தற்போது 40 ஆண்டுகளாக இந்திய அணு மின் கழகத்தின் முன்னணி பங்கு தாரராக உருவெடுத்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவில் உயரழுத்த கனநீர் உலைகள் அடிப்படையிலான அணுமின் நிலையங்களில் ஏறத் தாழ 75 சதவீதம் பெல் நிறுவனத் தால் தயாரித்து வழங்கப்பட்ட விசையாழிகள் மற்றும் மின்னாக் கிகள் துணையுடன் இயங்கு வருகின்றன. மற்றவை இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
மேலும், ரூ.10,800 கோடி மதிப்பிலான 6X7005 மெகா வாட் விசையாழி தொகுப்புகளுக்கான இந்திய அணுமின் கழகத்தின் ஒப்பந்தப்புள்ளியில் பெல் நிறு வனம் முதல்நிலை ஏலதாரராக நிலை பெற்றுள்ளது.
இந்தியாவில் அணுநீராவி விசையாழிகளுக்கான ஒரே உள் நாட்டு வழங்குநர் என்ற நிலையை பெல் நிறுவனம் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago