மோசடி நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் : பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி சிந்தாமணி பஜார் கண்ணன் ரவி டவர் 3-வது தளத்தில் ‘அபெக்ஸ் கேப்பிடல் சொல்யூசன்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனம் குறைந்த காலத்தில் முதலீட்டு தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி விளம்பரப்படுத்தியதால், அதை நம்பி ரூ.81 லட்சம் முதலீடு செய்ததாகவும், அந்த தொகையைத் திருப்பித் தராமல் நிறுவனத்தின் பங்குதாரர்களான உமாமகேஸ்வரி, அவரது கணவர் ரமேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய 3 பேரும் தலைமறைவாகிவிட்ட தாகவும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் திருச்சி பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கவுசர் நிஷா தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின்பேரில் பங்குதாரர்களில் ஒருவரான ஓலை யூரைச் சேர்ந்த ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்த னர். மற்றவர்களைத் தேடி வரு கின்றனர்.

இதற்கிடையே, இந்நிறுவ னத்தில் முதலீடு செய்து பாதிக் கப்பட்டவர்கள் இருந்தால், திருச்சி மன்னார்புரம் பல்துறை கட்டிடத்திலுள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும், இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0431-2422220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்