தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சில நாட்கள் மட்டுமே மழை நீடித்த நிலையில் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வறண்ட வானிலை காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஒரு சில இடங் களில் மட்டும் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழை பெய்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, மேக்கரை, வடகரை, சுரண்டை உட்பட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாரல் களைகட்டுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, மேக்கரை, வடகரை, சுரண்டையில் நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago