இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்கள், மதரசாக்கள், தர்க்காக்கள், அடக்கத்தலங்கள், தைக்காக்கள் மற்றும் முஸ்லிம் ஆதரவற்றோர் இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மானிய விலையில் 125 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப் படுகிறது. வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவாக உள்ளதோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் நிபந்தனைகளுடன் கூடிய விண்ணப்பங்களை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago