தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற - விண்ணப்பங்கள் வரவேற்பு : வேலூர், திருப்பத்தூர் ஆட்சியர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர் மாவட் டங்களைச் சேர்ந்த அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் உதவித்தொகை வழங்கப் படுகிறது. இந்நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

எனவே, 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை கணக்கில் கொண்டு 58 வயது பூர்த்தியடைந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்ப்பணி செய்தமைக்கான ஆதாரம், தகுதிநிலைச்சான்று, தமிழ் அறிஞர்கள் 2 பேரிடம் பெற்றப்பட்ட விண்ணப்பம் ஆகியவற்றை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இலவச பதிவிறக்கம்

விண்ணப்பப்படிவங்களை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உதவித் தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படும். இது தொடர்பான விவரம் தேவைப்படுவோர் 0416-2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘அ’ பிரிவுக்கட்டிடத்தில் உள்ள 4-ம் தளம், அறை எண் 421-ல் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அலுவலகத்திலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை இணை இயக்குநர் அலுவலகத்திலும் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

தமிழ்ப்பணி செய்தமைக்கான ஆதாரம், தகுதிநிலைச்சான்று, தமிழ் அறிஞர்கள் 2 பேரிடம் பெற்றப்பட்ட விண்ணப்பம் ஆகியவற்றை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்