மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் செயல் அலுவலர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பெருந்தொற்று காரணத்தினால் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இன்று ( ஜூலை 9) வெள்ளிக்கிழமை) அமாவாசை யன்று மேல்மலையனூர் அங்கா ளம்மன் கோயிலில் நடைபெற இருந்த ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் கோயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago