பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க - சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தென்காசி மாவட்டத்தில் தொடக்கம் :

தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் பெண்கள் துயர் துடைக்கவும், அவர்களது குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவும், துன்பத்தில் உள்ள பெண்களுக்கு அவசர சேவைகளை வழங்கவும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 2 பெண் காவலர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாவட்ட காவல்துறையில் 40 பெண் காவலர்கள் தலைமையில் 20 பெண்கள் உதவி மையங்கள் நிறுவப்பட்டுள்ளது.

இம்மையங்களுக்கு தனித் தனியாக மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவி, ஆலோசனை, தேவைப்பட்டால் தங்குமிடவசதி செய்து தருதல், அவர்களது வாழ்வாதாரத்துக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு, துணை கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, காவல் ஆய்வாளர் அன்னலெட்சுமி, உதவி ஆய்வாளர் ரத்ன பால்சாந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்