வேலூர் சைதாப்பேட்டை தோப்பாசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மெக்கானிக் பழனி(60). இவர், சென்னை சென்று விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பேருந்து மூலம் வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்தார்.
பிறகு, அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார். தோப்பாசாமி கோயில் தெருவில் இறங்கி அவர் வீட்டுக்கு நடந்து சென்றபோது, அவரை பின் தொடர்ந்து 3 பேர் வந்தனர். பழனி வீட்டுக்குள் செல்வதற்காக கதவை திறந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் 3 பேரும் பழனியை பிடித்து வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டினர். பின்னர், பழனியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை சரமாரியாக தாக்கி, அவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பழனி நேற்று காலை புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பழனியிடம் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago