விழுப்புரம் பேருந்து நிலைய கடைகளில் - காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலா வதியான குளிர்பானங்கள், உண வுப்பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து ஆட்சியர் மோகனுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாது காப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத் தினம், அன்பு பழனி, பிரசாத், இளங்கோவன், பத்மநாபன், அருண்மொழி, மோகன், கதிரவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ, காலாவதியான குளிர்பானங்கள் 55 லிட்டர், காலாவதியான உணவுப்பொருட்கள் 7 கிலோ, கெட்டுப்போன எண்ணெய் 8 லிட்டர் மற்றும் அழுகிய பழங்கள் 5 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட விதிகளின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட் களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் என மதிப் பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்