மீன்வளத் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு மானியம் :

By செய்திப்பிரிவு

மத்தியஅரசு சார்பில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.25 கோடியும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.50 கோடியும் வழங்கப்படும்.

தொழில்முனைவோர்களை ஊக்குவித்து மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பில் முதலீடு செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுயஉதவிக்குழு, தனிநபர், தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள் சேரலாம்.

விருப்பமுள்ளோர் வைகைஅணையில் உள்ள தேனி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத் தறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ 04546- 291891, 9384824276 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்