திண்டுக்கல் கமலா நேரு அரசு மருத்துவமனையில் கர்ப்பி ணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
இப்பணிகளை ஆட்சியர் விசா கன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள், 32 தனியார் தடுப்பூசி மைய ங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. மாவட்டத்தில் கரோனா பரிசோதனை அதிக எண்ணிக்கையில் மேற்கொள் ளப்பட்டு வரும் நிலையில் பாதிப்பு குறைவாக இருக்கிறது. பொதுமக்கள் முகக் கவசம் அணி வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, குடும்ப நல துணை இயக்குநர் பூங்கோதை, மாநகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago