நிரந்தர மக்கள் நீதிமன்ற சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தேனி மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் தெரிவித்தார் .
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டம் 1987 (திருத்தச் சட்டம்) 2002-ன் படி, நிரந்தர மக்கள் நீதிமன்றம் தேனியில் செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர், 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைக் குறைபாடுகள் தொடர்பாக, இங்கு வழக்கு தாக்கல் செய்யலாம். வழக்கு தாக்கலுக்கு கட்டணம் கிடையாது.
இதன் தீ்ர்ப்பு உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பாணைக்கு சமமானது. மேல் முறையீடு செய்ய முடியாது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்படும் இந்த நீதிமன்றத்தில் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை.
எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உடன் சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளர் கே.ராஜ்மோகன் இருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago