ராமநாதபுரம் மாவட்டத்தில் பள் ளிக்கு வராத ஆசிரியர்கள் 50 பேருக்கு விளக்கம் கோரி நோட் டீஸ் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உத் தரவிட்டுள்ளார்.
கரோனா ஊரடங்கு தளர் வுகளை அரசு அறிவித்த நிலை யில், கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கல்வித்துறை அறிவித்தபடி ஆசிரியர்கள் பள்ளிக்கு முறை யாக வருவதில்லை என்ற புகார் எழுந்தது. புகாரை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தி யமூர்த்தி ராமநாதபுரம், கமுதி, ராமசாமிபட்டி, மண்டபம் என பல்வேறு பகுதி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வராதது கண்டறியப்பட்டது. பள்ளிக்கு வருகை தராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிட சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, அரசு அறிவித்த நாளில் இருந்து அனைத்து ஆசிரியர்களும் பள் ளிக்கு வரவேண்டும் என அறிவு ருத்தப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட பள்ளிகளில் சில ஆசிரியர்கள் வரவில்லை என்பதை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தி அவர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago